அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள தோமாஹாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2016 ம் ஆண்டில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் அன்னே என் நெல்சன் கோச். அப்போது அவருக்கு வயது 67. அந்த வயதிலும் நெல்சன் கோச், அந்த பள்ளியில் 14 வயது மாணவன் ஒருவனை 25 முறை பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
வகுப்பறைக்கு பின்புறம் மாணவனை அழைத்து சென்று ஆசிரியை இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரம் வெளியே தெரிந்து, அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் டீச்சருக்கு 600 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது. அக்டோபர் 27 அன்று அவருக்கான தண்டனை அறிவிக்கப்பட உள்ளது. அதுவரை நெல்சன் கோச் சிறையில் இருக்குமாறு ஸ்கைல்ஸ் நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் மன்ரோ கவுண்டி சர்க்யூட் நீதிமன்ற நீதிபதி ரிச்சர்ட் ராட்க்ளிப் அவருக்கு தண்டனை விதிக்கப்படும் வரை அவர் ஜிபிஎஸ் மானிட்டர் மூலம் கண்காணிக்கப்படுவார் என கூறி விடுவித்தார். தற்போது ஆசிரியைக்கு 74 வயது ஆகிறது.