தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ராஜகிரி ஊராட்சியில் இரண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு குழந்தை மைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 61 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடங்கள் பூமி பூஜை நடைபெற்றது. இவ்விழாவிற்கு பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சுதா, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், ராஜகிரி ஊராட்சி மன்ற தலைவர் சமீரா பர்வீன் முபாரக் உசேன், வட்டார கல்வி அலுவலர் ஜெய மீனா, தலைமையாசிரியர்கள் உமா ராணி, நிர்மலா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.