இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, பொதுமக்கள் விண்ணப்பம் அளிக்க, ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆன்லைன் வழியாகவும், ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் நேரடியாகவும் விண்ணப்பம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
வாக்காளர் சிறப்பு முகாம் நான்கு நாட்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான நபர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறந்தவர்கள் பெயரை நீக்கி, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் இன்று (ஜன.6) வெளியிடப்பட்டது.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 3.11 கோடி, பெண் வாக்காளர் 3.24 கோடி, 3ம் பாலினத்தவர்கள்- 9,120 பேர் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கை; இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி நாகை மாவட்டம் கீழ் வேளூர் தொகுதியில் தான் குறைந்த எண்ணிக்கையில் வாக்காளர்கள் உள்ளனர். கீழ்வேளூர் (நாகை) மொத்த வாக்காளர்கள் : 1,76,505,
அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 91 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கின்றனர்.