நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து வருகிறது. நேற்று மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
இதில் 695 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், உபியின் ரேபரேலியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அமேதியில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, லக்னோவில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், மும்பை வடக்கில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், பீகாரின் ஹாஜிபூரில் லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான், காஷ்மீரின் பாராமுல்லாவில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்கினர். காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
மாலை 6 மணியுடன் முடிவடைந்த வாக்குப்பதிவில், மொத்தம்60.48 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 76.05 சதவீதமும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிராவில் 54.33% வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தலுடன் ஒடிசாவின் கோண்டா சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் போட்டியிட்டார். இதே போல ஒடிசாவில் 35 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
மேற்கு வங்கத்தில் கடந்த 4ம் கட்ட தேர்தலின் போது வன்முறை சம்பவங்கள் நடந்ததால் இம்முறை 7 மக்களவை தொகுதிகளில் சுமார் 1 லட்சம் போலீசார், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் தேர்தலில், பாராக்பூர், போங்கான், மற்றும் ஆரம்பாக் ஆகிய தொகுதிகளில் பல்வேறு பகுதிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ தொண்டர்கள் இடையே மோதல் சம்பவங்கள் நடந்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயலிழந்ததாகவும், முகவர்களை வாக்குச்சாவடிக்குள் நுழைய விடாமல் தடுத்ததாகவும் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து 1,036 புகார்கள் வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மீடியாக்களுக்கு கருத்து தெரிவிப்பதையும் தவிர்த்தார். முன்னதாக, ஹவுரா தொகுதியில் தனக்கு சீட் தரப்படும் என பாபுன் எதிர்பார்த்த நிலையில், சிட்டிங் எம்பி பரசுன் பானர்ஜிக்கு சீட் கொடுத்தார் மம்தா. இதனால் அதிருப்தி அடைந்த பாபுன் சுயேச்சையாக போட்டியிடுவதாகவும், பாஜவில் சேருவதாகவும் பல பொய் செய்திகள் வெளியாகின. இதனால் பாபுடனான உறவை மம்தா முறித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய 5ம் கட்ட தேர்தலுடன் மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளுக்கும் தேர்தல் நிறைவடைந்து விட்டது. நாடு முழுவதும் 24 மாநிலங்களில் 428 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 25 மற்றும் ஜூன் 1ம் தேதி நடக்கும் கடைசி 2 கட்ட தேர்தலில் 115 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இம்முறை கேரளாவின் வயநாடு தவிர 2வது தொகுதியாக உபி ரேபரேலியிலும் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் நேற்று வாக்குப்பதிவு நடந்ததைத் தொடர்ந்து அங்கு வந்த ராகுல் காந்தி அனுமன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அதைத் தொடர்ந்து சில வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் ராகுலுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டனர். நிருபர்கள் பலர் பேட்டி எடுக்க முயன்ற போது ராகுல், பேட்டி தராமல் சென்றார்