திமுக அரசு பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கடந்த நவம்பர் 11ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் பணி முடுக்கி விடப்பட்டது. இன்று 50ஆயிரமாவது விவசாயிக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான ஆணையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மின்வாரிய தலைவர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.