லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ‘லியோ’ படத்தின் ப்ரீ ரிலீஸ் மட்டும் 400 கோடி மேல் வசூலித்துள்ளது. இது கோலிவுட் உலகில் அதிக எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
60 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் விஜய் கேரக்டர் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் 50 வயது தோற்றத்தில் நடித்து வருகிறார். விஜய்யும், திரிஷாவும் கணவன், மனைவியுமாக நடித்து வருகின்றனர். அவர்களுக்கு 15 வயது பெண்ணாக பிக்பாஸ் ஜனனி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.