தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே ஆடுதுறை ரைஸ் சிட்டி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
பள்ளித் தாளாளர் எம்.ஜே.ஏ.ஜமால் முகம்மது இப்ராஹிம் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் ஜெய்னுல் யாஸ்மின், முதல்வர் சையது அலி பாத்திமா முன்னிலை வகுத்தனர். 50 ஆண்டுகள் பழமையான இந்தப் பள்ளியானது ஆடிட்டர் கிராமப் புற பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பள்ளியில் 1976 ம் ஆண்டு முதல் படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைப் பெற்றது. நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இவர்கள் தங்களின் பள்ளி பருவ காலத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை நினைவு கூர்ந்தனர். நிகழ்வில் 90 கிட்ஸ், 20 கிட்ஸ் என பிரிக்கப்
பட்டனர். செய்தித் தாள், அஞ்சல் அட்டை, சக்தி மான் போன்ற நினைவலைகளை கூறினர். முன்னாள் மாணவர்களின் புகைப்பட ஆல்பங்கள் அவ ர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளியின் முன்னாள் மாணவர், வாழ்நாள் சாதனையாளர் விருது டாக்டர் மகேந்திரனுக்கு வழங்கப்பட்டது. டாக்டர் முகமது சாஹித், கனடா பொறியாளர் சுபாஷ், இங்கிலாந்தில் பணிபுரியும் முகம்மது முக்தார், அரசு மகப்பேறு மருத்துவர் சபீதா உட்பட முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர்கள் சார்பில் 3 லட்ச ரூபாய் செலவில் நூலக புத்தகங்கள், கணிணிகள் வழங்கப் பட்டன. முன்னாள் ஆசிரியர்கள் உமாபதி, மாலா. மைதிலி, சொக்கலிங்கம் உள்பட பங்கேற்றனர்.