நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது . கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டியம் பட்டி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ கலந்து கொண்டு மூவர்ண கொடியேற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பின்னர் பள்ளி மாணவ மாணவிகள்
வகுப்பறையில் நாட்டுப்பண் தேசிய கீதம் பாடலை 50 மாணவர்கள் தனித்தனியாக எழுதி சுதந்திர தின விழாவினை போற்றும் விதமாக எழுதினர். நாட்டுப்பற்றை போற்றும் வகையிலும், மாணவர்களின் தேசப்பற்றை தேசிய கீதமாக வகுப்பறைகளில் எழுதி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தினர். தலைமையாசிரியர் கோ.மூர்த்தி மாணவ மாணவிகளுக்கு சுதந்திர வாழ்த்துக்களையும், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சேனாபதி, கதிர்வேல் ஆகியோருக்கு கலந்து கொண்டனர்.