சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் தனியார் ஐ.டி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு, பகல் என, பாராமல் கடுமையாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஐ.டி. நிறுவனம் தங்களது நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் ஊழியர்களில் 50 பேருக்கு 50 கார்களை பரிசளித்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்களுடைய ஐ.டி நிறுவனத்தின் 38 ஊழியர்களுக்கு 33 சதவீதம் பங்குகளை ஒதுக்கி நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் மாற்றி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை புத்தாண்டில் கொடுத்துள்ளார். இதேப்போல கடந்த ஆண்டும் 100 ஊழியர்களுக்கு கார்களை இந்த நிறுவனம் வழங்கியது. இதுகுறித்து நிறுவன ஊழியர்கள் கூறுகையில், ‘எங்களுக்கு அவ்வப்போது இதுபோன்ற பரிசுகளை நிறுவனம் அளிப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது. அதேப்போல் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் ஏற்படுத்துகிறது’ என்றனர்.