Skip to content
Home » பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் 5 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்….

பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் 5 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்….

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகள் தங்கி பயிலும் வகையில் விடுதி செயல்பட்டு வருகிறது. இவ்விடுதியில் 6 மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பொங்கல் உணவு பரிமாறப்பட்டது. இந்த பொங்கல் உணவை சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள் வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்ட 5 மாணவிகளை செந்துறை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் காலை உணவாக பரிமாறப்பட்ட பொங்கலை மாணவி வாங்கி வைத்த பொங்கலில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விடுதியில் 6 மாணவிகள் மட்டும் தாங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு சுகாதாரமான சுத்தமான உணவை சமைத்து வழங்க முடியாத நிலையிலே விடுதி நிர்வாகம் செயல்பட்டு வருவதாகவும், இந்த விடுதிக்குரிய காப்பாளர் விடுதிக்கே வருவதில்லை எனவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!