மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை ஆயுட்காலம் முடிவடைவதால், விரைவில் அங்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், கார்கே ஆகியோர் மேற்கண்ட மாநிலங்களில் ஏற்கனவே சுற்றுப்பயணம் செய்து முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
இந்த மாநிலங்களில் தேர்தலை நடத்த ஆணையமும் தயார் நிலையில் உள்ளது. இந்த வார இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த 2018ல் இந்த மாநிலங்களின் தேர்தல் தேதி அக்டோபர் 7ம் தேதி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் மக்களவை தேர்தலின் உரைகல் என்பதால் காங்கிரசும், பாஜகவும் இந்த 5 மாநிலங்களிலும் வெற்றிக்கனி பறிக்க தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது.