ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் நேற்று இரவு பீரங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா்., அப்போது அவர்கள் லடாக் பகுதியில் ஆற்றை கடந்தபோது திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தில் பீரங்கி அடித்து செல்லப்பட்டது. அந்த பீரங்கயில்5 வீரர்கள் இருந்தனர். 5 பேரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் அதிகாரி. மற்றவர்கள் வீரர்கள்.அவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை. உடல்களைத் தேடும் பணி நடக்கிறது.இந்தியாவின் வடக்கு எல்லையில் இந்த துயர சம்பவம் நடந்ததுள்ளது. இதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.