Skip to content

தமிழகத்தில் மேலும் 5 மருத்துவ கல்லூரி…மத்திய அரசு அனுமதி

தேசிய மருத்துவ ஆணையம் நாடு முழுவதும் 113 புதிய மருத்துவக்கல்லூரிகளை தொடங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. இதில் அதிகபட்சமாக  22 கல்லூரிகள் உத்தரபிரதேசத்திலும், 14 கல்லூரிகள் மராட்டியத்திலும் அமையவுள்ளன.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா ஓங்கூர், விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சென்னை அவனம்பட்டு, மற்றும் கன்னியாகுமரியில் தனியார் சார்பில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.

தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின் படி தமிழ்நாட்டில் எம் பி பி எஸ் படிப்புக்கு 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 22 தனியார் மருத்துவக் கல்லுூரிகளுமாக மொத்தம் 58 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த 5 புதிய கல்லூரிகளுடன் சேர்த்து அந்த எண்ணிக்கை 63 ஆக உயர உள்ளது. இதைப்போல நாடு முழுவதும் 706 மருத்துவ கல்லூரிகளுடன் புதிய மருத்துவக் கல்லூரிகள் 113- ஐயும் சேர்த்து மொத்தம் 819 மருத்துவக் கல்லூரிகளாக அதிகரிக்க இருக்கிறது.

htt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!