Skip to content

தமிழ்நாட்டில் புதிதாக 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும்…. மத்திய அரசு தகவல்..

அரக்கோணம், செட்டிநாடு, சோழவரம், சூலூர் மற்றும் உளுந்தூர்பேட்டையில் உள்ள விமான ஓடுதளங்களை சீரமைத்து புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

சேலம், வேலூர், நெய்வேலி, தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் என 5 விமான நிலையங்கள் உதாண் திட்டத்தின் கீழ்மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

சேலம் விமான நிலையத்திலிருந்து விமானங்களின் பயணங்கள் ஏற்கனவே துவக்கப்படுள்ளன. நெய்வேலி மற்றும் வேலூரில் உள்ள மேம்பாட்டு பணிகள் முடிவடைந்து, தற்போது அங்கீகாரம் பெறுவதற்கான செயல்முறையை உள்ளன. ராமநாதபுரம் விமான நிலையத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகள் மாநில அரசு மூலம் தொடரப்படுகிறது. தஞ்சாவூரில் தேவையான அணுகு சாலை மாநில அரசு மூலம் வழங்கப்பட்டால் விமான நிலைய கட்டிட வேலைகள் தொடங்கப்படும்- நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி கேட்ட கேள்விக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் பதில் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!