உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் லெட்சுமண சந்திர விக்டோரியா கவுரி பெயர் பரிந்துரை செய்யப்பட்டதற்கு, மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், எதிர்ப்பை மீறி விக்டோரியா கவுரி உள்பட 5 புதிய நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதியபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் அமைப்பு, உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு பெயர் பட்டியலை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த பெயர் பட்டியலில், இடம் பெற்றிருந்த வழக்கறிஞர் விக்டோரியா கவுரி பா.ஜ.க தேசிய மகளிரணி பொதுச் செயலாளராக இருந்தவர் என்றும் அவரை நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் 21 பேர் கையெழுத்திட்டு குடியரத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும் கொலீஜியத்தும் மனு அனுப்பினர்.
விக்டோரியா கவுரியை நிதிபதியாக நியமனம் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களின் எதிர்ப்பையும் மீறி விக்டோரியா கவுரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விக்டோரியா கவுரி, கலைமதி, திலகவதி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகிய 5 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.