ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்., கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சிவபிரசாந்த், இவருக்கு மாற்று வேட்பாளராக விசாலாட்சி, அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுதவிர பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் பலரும் ஈரோடு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில் 5 நாட்கள் வேட்புமனு தாக்கல் நிலையில் மோத்தம் 46 பேர் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.