Skip to content

கரூர் ஜோதிமணி உள்பட 5 காங். எம்.பிக்கள் சஸ்பெண்ட்

  • by Authour

மக்களவையில் நேற்று 2 பேர் திடீரென புகுந்து  புகை குண்டுகளை வீசினர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இன்று மக்களவை கூடியதும்  பல்வேறு கட்சித்தலைவர்கள் மக்களவையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும், இதுபற்றி  விவாதிக்க வேண்டும். மற்ற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என முழக்கமிட்டனர். இதற்கு சபாநாயகர்  அனுமதி அளிக்கவில்லை. இதனால் சபை நடத்த முடியாத அளவுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்க மிட்டனர். எனவே 2 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

2 மணிக்கு சபை  மீண்டும் கூடியதும், அதே பிரச்னையை காங்கிரஸ் எம்.பிக்கள் எழுப்பினர்.  கரூர் ஜோதிமணி,  ரம்யா ஹரிதாஸ்,  உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள்  சபையில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. அது குறித்து விவாதிக்க வேண்டும் என முழக்க மிட்டனர். இதனால்  ஜோதிமணி, ரம்யா, பிரதாபன்,  சூரியகோஸ், ஹிபி இடன்  ஆகிய  5 காங்கிரஸ் எம்.பிக்களை  இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா  உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!