கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே கந்தம்பாளையம் பகுதி சேர்ந்தவர் சந்திரசேகர் அவரது மகன் தீபக் குமார் இருவரும் புகலிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம் செய்து வருவது வழக்கம்.
இந்நிலையில் சந்திரசேகர் அவரது மனைவி மஞ்சுளா தேவியும் வெளியூருக்கு சென்று விட்டனர். தீபக் குமார் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பூஜை செய்வதற்காக சென்று விட்டனர். அவரது மனைவி பானுப்பிரியா பாட்டி தர்மாம்பாள் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் பின்புறம் உள்ளே மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 5 1/4 பவுன் நகையை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பானுப்பிரியா தனது கணவர் தீபக் குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். வேலாயுதம்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அர்ச்சகர் வீட்டில் நகை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.