சென்னையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலுவை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா சந்தித்து பேசினார். அப்போது
புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தரும்படியும் , புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல் மாலையிடு வரையிலுள்ள சாலையை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தி தரும்படியும் கோரிக்கை மனு வழங்கினார். மேற்கண்ட இரண்டு பணிகளுக்கும் நடப்பு நிதியாண்டிலேயே நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடரும் என அமைச்சர் உறுதியளித்ததாக
சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா தெரிவித்தார்.
