உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளில் ஒவ்வொரு அணியும் பெறுகின்ற வெற்றியின் சதவீதத்தின் அடிப்படையில், 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அந்த வகையில் இன்று இந்தியாவை வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஆடும் அணி எது என்பதை வர இருக்கும் போட்டிகள் தீர்மானிக்கும். இந்தியா-ஆஸ்திரேலியா மோத இருக்கும் 4வது டெஸ்ட் போட்டி வரும் 9ம் தேதி அகமதாபாத்தில் நடக்கிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்தியா மோதும்.
இந்த போட்டியிலும் இந்தியா தோற்று விட்டால், இலங்கை-நியூசிலாந்து நாடுகள் இடையே நடைபெற உள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை தோற்றால் இந்தியா உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும்.
4வது போட்டியில் இந்தியா தோல்வியுற்று, இலங்கையும் வெற்றி பெற்றால், இறுதிப்போட்டிக்கு இலங்கை தகுதிபெறும்.