திருச்சி தில்லைநகர் பகு தியை சேர்ந்த 10 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். தாய் இறந்ததாலும், தந்தை கைவிட்டதாலும் பாட்டியுடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி, நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை அவரது பாட்டி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர், தில்லைநகர் இபி அலுவலகம்அருகே காயத்துடன் நின்று கொண்டிருந்த சிறுமியை பார்த்துள்ளார். அதுகுறித்து அவர் விசாரித் தபோது, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், சிறுமியிடம் பேச்சுக் கொடுத்தவாறு பஸ்சில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றதும், பின்னர் ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் விடியும்வரை சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
சிறுமியை அழைத்து வந்த முதியவர், அவரது பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு, வீட்டுக்கு சென்றுவிட்டார். இதுகுறித்து தில்லைநகர் போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார், சிறுமியை சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவான நபரை உடனடியாக பிடிக்கு மாறு உத்தரவிட்ட
போலீஸ் கமிஷனர் காமினி, அதற்காக தனிப்படை அமைத்துள்ளார். தில்லைநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி உய்யக் கொண்டான் திருமலை ஆதி நகரை சேர்ந்த சின்ன ராஜா(24) சிதம்பரத்தில் கைது செய்துள்ளனர். அவரை பிடிக்கும் பொழுது தப்பி ஓடி கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டுள்ளது. முன்னதாக சிறுமியை இளைஞர் கடத்தி சென்று ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம் ரயில்வே பாலத்தில் கீழே வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .பிறகு அந்த சிறுமியை திருச்சி தென்னூர் பகுதிக்கு வந்து விட்டு சென்றுள்ளார். மேலும் அவனது ஆடைகள் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன அவைகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். போலீசார் விசாரணையில் நடந்த சம்பவம் முழுவதையும் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். சிறுமி காயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.