திருச்சி மாவட்ட பீஸ்ட் பவுன்சர்ஸ் சார்பில் 4ஆம் ஆண்டு உடல் உறுப்பு தானம் செய்யும் நிகழ்ச்சி இன்று தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நான்காம் ஆண்டு துவக்க விழாவை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு…
நம்முடைய முதல்வர் மற்றும் அவரது துணைவியார் இருவரும் தங்களுடைய உடல்களை தானமாக கொடுப்பதாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பதிவு செய்தார். அதன்பின் தான் பலர் தாமாக முன்வந்து உடல் உறுப்புகளை தானமாக வழங்க பதிவு செய்து வருகின்றனர்.
இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
வெறும் உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது மற்றும் உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதை உடன் இறுதி சடங்குகள் செய்வது உள்ளிட்ட திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார்.
பின்னர் உடல் உறுப்பு தானம் செய்யும் இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மூளை நரம்பியல் துறை மருத்துவர் வேனி எழுதிய புத்தகத்தை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,பீஸ்ட் பவுன்சர்ஸ் ஜோனல், பகுதி செயலாளர் மோகன்தாஸ்,மாமன்ற உறுப்பினர்கள்
காஜாமலை விஜி, புஷ்பராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.