கரூர் மாவட்டம், ஈசநத்தம் விஐபி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (64). இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பைனான்ஸ் தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண்கள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். இவருடைய மனைவி உடல்நிலை சரியில்லாமல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 7 மாதமாக சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி ராஜேந்திரன் வீட்டை பூட்டிவிட்டு பைனான்ஸ் வேலையாக தூத்துக்குடி சென்றுள்ளார். வேலை முடித்துவிட்டு ஈசநத்தம் திரும்பிய ராஜேந்திரன் பூட்டிய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் துணிகள் கலைந்து இருந்ததை
கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பீரோவில் வைக்கப்பட்டிருந்த 49 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதை அறிந்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ஆதாரங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.