நீ என்னென்ன செய்தாலும் புதுமை ……..என்று , எம்.ஜிஆரின் நேற்று இன்று நாளை படத்தில் ஒரு பாடல் இடம் பெற்றது. அதுபோல தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது துறையில் ஒவ்வொரு நாளும் பல புதுமைகளையும், சாதனைகளையும் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும், தமிழக மக்களிடமும் பாராட்டை பெற்று வருகிறார்.
கோடை காலம் வந்தாலே தமிழகத்தில் மின்வெட்டு வரும் என சொன்னவர்கள் எல்லாம் இன்று வாயடைத்துபோய் நிற்க செய்து உள்ளார் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. கோடை என்பதால் விவசாயத்திற்கு மட்டுமின்றி, வீடுகளின் தேவைக்கும் அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு நாளும் மின் நுகர்வு அதிகரித்துக்கொண்டே இருந்தாலும், தங்கு தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
தமிழக மின்துறை வரலாற்றில் நேற்று(ஏப்ரல்13) 40 கோடி யூனிட் மின் நுகர்வு செய்யப்பட்டு உள்ளது. இது ஒரு சாதனை அளவாகும். ஆனாலும் மின்சாரம் தடை இன்றி தேவை பூர்த்தி செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முன் ஏப்ரல் 12ம் தேதி 39.92 கோடி யூனிட் மின் நுகர்வு நடந்து உள்ளது. அதுவும் தடையின்றி ஈடுசெய்யப்பட்ட நிலையில் நேற்று அதையும் கடந்து 40 கோடி யூனிட் தேவையும் தடையின்றி வழங்கப்பட்டு மின்துறை சாதனை புரிந்து உள்ளது. இதற்காக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை மக்கள் பாராட்டி உள்ளனர்.