வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே மெட்டுக்குளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேட்டுக்குளத்தை சேர்ந்த ராஜா தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்திருந்தார். இந்தநிலையில் தான் திருமணத்திற்கு உடைகள் வாங்க ராஜா குடும்பத்துடன் சென்னை சென்ற நிலையில் வீட்டில்
கொள்ளையானது. வீட்டின் பூட்டை கேஸ் கட்டிங் மூலம் கட் செய்து 40 சவரன் நகை, 500 கிராம் வௌ்ளிப்பொருட்கள் கொள்ளை அடித்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.