ஜனாதிபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவித்து ராஜ்யசபாவில் இன்று பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
எனது பேச்சை கேட்ககூடாது என முடிவு செய்து எதிர்க்கட்சிகள் வந்துள்ளன. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதி்களில் கூட வெற்றி பெறாது. 400 இடங்களில் பாஜக வெற்றிபெறும். இதற்காக மல்லிகார்ஜூன கார்கே ஆசி வழங்கி உள்ளார். முற்போக்கு சிந்தனை காங்கிரசிடம் இல்லை. நாட்டை பிளவுபடுத்துவதில் தான் காங்கிரஸ் கவனம் செலுத்துகிறது. வடகிழக்கு மாநிலத்தில் நக்சலைட் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு காங்கிரஸ் தான் வித்திட்டது. கடந்த காலத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள். இப்போது எங்களுக்கு உபதேசம் செய்கிறீர்கள்? நாட்டின் பாதுகாப்பு பற்றி இப்போது பேசும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தது?
10 ஆண்டு காங்கிரஸ் செய்யாத சாதனையை , பாஜக 5 ஆண்டுகளில் செய்து காட்டியது. காங்கிரஸ் ஆட்சி்யில் தான் எமர்ஜென்சி போன்ற ஒடுக்குமுறைகள் வந்தன. நாட்டை வடக்கு, தெற்கு என பிரித்தாள முயற்சிக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் தலைவர்களின் எண்ணங்கள் காலாவதியாகிவிட்டன. எப்படி இருந்த காங்கிரஸ், இப்படி ஆகிவிட்டதே… முந்தைய ஆட்சியில் வரி வசூலிலும் ஊழல் நடந்தது. காங்கிரஸ் ஊழலுக்கு எதிராக மக்கள் போராடினர். பொருளாதாரத்தில் இந்தியா 12வது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆனால் இப்போது 5வது இடத்திற்கு வந்தது.
அம்பேத்கருக் காங்கிரஸ் பாரதரத்னா விருது தரவில்லை. தங்கள் குடும்பத்தினருக்கே பாரத ரத்னா வி்ருது வழங்கி்யது. ஆங்கிலேயர் கால மரபுகளைத்தான் காங்கிரஸ் பின்பற்றியது. அதை நாங்கள் நீக்குகிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.