புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு திருட்டு குற்ற வழக்குகள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தார். இந்நிலையில் இலுப்பூர் தனிப்படையினருக்கு மதுரை பெரியார்நகர் அஞ்சல் நகரில் திருட்டு பொருட்கள் விற்பதாக தகவல் வந்தது. தகவலறிந்த தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றவாளிகளை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் கரிமேடு ராஜேந்திரா 3-ம் வீதியை சேர்ந்த நாடாச்சி @ லதா (40) , ராமு (30). ஆரப்பாளையம், அண்ணா பாலா குறுத்து தெரு,மெயின் வீதியை சேர்ந்த கார்த்தி ராஜா (26) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் திருடிய பொருட்களை மதுரை, பெரியார் நகர், அஞ்சல் நகரை சேர்ந்த சாமுவேல் (42) என்பவரிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. மேற்கண்ட நால்வரையும் தனிப்படையினர் அதிரடியாக கைது செய்துஅவர்களிடம் இருந்து 40 பவுன் தங்க நகைகள் மற்றும் திருட்டிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் சிறப்பாக பணியாற்றிய இலுப்பூர் உட்கோட்ட தனிப்படையினரை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் அழைத்து பாராட்டினார்.