மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இங்கு கடந்த ஒரு மாதமாக போராட்டங்கள், வன்முறைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் முதல் மந்திரி பிரேன் சிங், இம்பால் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வன்முறை சம்பவங்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்திய நபர்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில், ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 3-ம் தேதி மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, இந்திய ராணுவம் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. இதில், பாதுகாப்புப் படையினருக்கும், ஆயுதமேந்திய பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. மக்கள் சமூகத்தினர் இடையே இல்லை. அதனால், மக்கள் அமைதி காக்க வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதற்காக ஹெலிகாப்டர் உதவியுடன் வான்வழி கண்காணிப்பு பணியும் நடந்து வருகிறது என தெரிவித்தார்.