புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த பிலிப்பட்டி ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 15 மாணவிகள் பள்ளி இடைநிலை ஆசிரியர் ஜெப சகேயு இப்ராஹிம் மற்றும் பட்டதாரி ஆசிரியர் திலகவதி ஆகிய இருவருடன் திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள கல்லூரியில் நடைபெறும் மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க வந்துள்ளனர்.
போட்டி முடிந்து திரும்பும் போது, கரூர் மாவட்டம், காவேரி ஆற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி தமிழரசி, இனியா, சோபியா, லாவண்யா ஆகிய நான்கு மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்த நான்கு மாணவிகள் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில் காவிரி ஆற்றில் அப்பள்ளி மாணவி
கீர்த்தனா மூன்று பெண்களை காப்பாற்றியுள்ளார். இல்லையென்றால் பலி எண்ணிக்கை 7 ஆக இருந்துருக்கும்.
இந்த நிலையில் மாணவிகளை விளையாட்டுப் போட்டிக்கு அழைத்து வந்துவிட்டு, பெற்றோர்களிடம் தகவல் தெரிவிக்காமல் ஆற்றுக்கு அழைத்து சென்ற காரணத்தால் மாணவிகள் பலியான சம்பவத்தின் எதிரொலியாக, அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் ஜெப சகேயு இப்ராஹிம் மாயனூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து ஆசிரியர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.