அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலைய சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ரமேஷ். இவர் வேத்தியார்வெட்டு கிராமத்தில் வசித்து வருகிறார்.
இவரது மகள் நவீனா ஜெயங்கொண்டம் அருகே உள்ள குழவுடையான் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதினார். தமிழக முழுவதும் நேற்று பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இத்தேர்வில் நவீனா தேர்ச்சி பெற்றார்.
இவர் கணிதம், இயற்பியல், வேதியல் உயிரியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் தலா 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு 596 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மாணவி
நவீனா மற்றும் அவரது தந்தை ரமேஷ் ஆகியோருக்கு காவல் அதிகாரிகள், சக காவலர்கள் மற்றும் அரியலூர் மாவட்டம் முழுதிலிருந்தும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நவீனா செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்வுக்கு தன்னை ஊக்கப்படுத்திய பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், மருத்துவராகி ஏழை எளிய மக்களுக்கு தொண்டு செய்வது தனது லட்சியம் என்று கூறியுள்ளார்.