பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் விலையுயர்ந்த இடங்களில்தான் வீடுகளை வாங்கியோ, வாடகைக்கு எடுத்தோ வசிப்பது வழக்கமாகும். அந்த வகையில் பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர், புனேவில் உள்ள டிரம்ப் டவர்ஸ் அபார்ட்மென்ட்டில் புதிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். மாத வாடகையாக 4 லட்சம் ரூபாயாம். இரண்டாவது வருடத்தில் 4.2 லட்சம், மூன்றாவது வருடத்தில் 4.4 லட்சம் என வாடகையை உயர்த்த ஒப்பந்தம் செய்துள்ளனர்.
டிரம்ப் டவர்ஸ் என்பது அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகனான டொனால்ட் டிரம்ப் ஜுனியர் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள த டிரம்ப் அமைப்புக்குச் சொந்தமானதாகும். இந்தியாவில் மும்பை, குருகிராம், கொல்கத்தா ஆகிய இடங்களில் டிரம்ப் டவர்ஸ் அமைந்துள்ளது.