திருப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏராளமானோர் பயணம் செய்தனர். செங்கப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் பலருக்கு படுகாயம் ஏற்பட்டது.
தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடைபெற்ற இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.