கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனைக்கு சென்றனர். அப்போது ஒரு வீட்டில் அவர்கள் சுவர்ஏறிகுதித்து உள்ளே சென்றனர். இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் திமுகவினர், அவர்களை ஏன் சுவர் ஏறி குதிக்கிறீர்கள் என கேட்டு உள்ளனர். நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி உள்ளனர்.
அதற்கான அடையாள அட்டை இருக்கிறதா என கேட்டு உள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒரு அதிகாரி திமுக பிரமுகரை தாக்கினார். இதனால் திமுகவினர் ஒரு காரின் கண்ணாடியை சேதப்படுத்தினர். இந்த சம்பவம் காலை 7 மணிக்குள் நடந்தது.
அதன் பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கரூர் எஸ்.பி. அலுவலகம்
சென்றனர். எஸ்.பி உத்தரவின்படி சோதனை நடைபெறும் இடங்களில் சுமார் 200 போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர்( பெண் அதிகாரி காயத்ரி , சுனில் குமார், பங்கஜ் குமார், கல்லா சீனிவாசராவ் ) மதியம் 1.30 மணி அளவில் கரூர் அரசு தலைமை மருத்துவ மனைக்கு சென்று தங்களை திமுகவினர் தாக்கியதாகவும், அதில் காயமடைந்து விட்டதாகவும் கூறி சிகிச்சைக்காக சேர வேண்டும் என்றனர்.
டாக்டர்கள் காயத்தை வெகுநேரம் தேடிப்பார்த்தனர். பின்னர் அவர்களை அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் இங்கு யாரையும் விடக்கூடாது என உத்தரவு போட்டனர். போலீசார் கூட வரக்கூடாது எனகெடுபிடி செய்தனர்.
கார் கண்ணாடி சேதமடைந்ததற்கு அதிகாரிகளுக்கு எப்படி சிகிச்சை அளிக்க முடியும் என அங்கு திரண்டிருந்த மக்கள் பேசிக்கொண்டனர்.