நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில், இன்று தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே. வி. தங்கபாலு விசாரணைக்கு அழைக்கப்பட்டார். நெல்லையில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் இந்த விசாரணை நடந்தது. களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்த விசாரணையை நடத்தினார். சுமார் 4 மணி நேரம் விசாரணை நடந்தது. ஜெயக்குமார் எழுதி வைத்த கடிதத்தில் தங்கபாலு பெயரும் இடம் பெற்றிருந்ததால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஒவ்வொரு கேள்வியாக கேட்டு, அதற்கான பதிலையும் வீடியோவில் பதிவு செய்தனர். விசாரணை முடிந்ததும் தேவைப்பட்டால் மீண்டும் விசாரணை நடத்துவோம். எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வரவேண்டும் என கூறி அவரை அனுப்பிவைத்தனர்.
விசாரணை முடிந்து வெளி்யே வந்த தங்கபாலு, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என்று போலீசார் கூறி உள்ளனர் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.