கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து உத்தரகன்னட மாவட்டத்துக்கு பள்ளி மாணவிகள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். முருடேஸ்வரர் கோயில் கடற்கரைக்கு சென்றபோது மாணவிகள் 7 பேர் ஆழமான கடலில் பகுதிக்கு சென்று குளித்தனர் . அப்போது 7 மாணவிகளை கடல் அலை அடித்து சென்றது. சக மாணவிகள், ஆசிரியர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகளில் 3 பேரை காப்பாற்றினர்; 4 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். ஸ்ரீவந்ததி, தீஷிதா, லாவண்யா, வந்தனா ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.