Skip to content
Home » சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதுயுக்தி… தனியார் விடுதி ஊழியர்கள் 4 பேர் கைது…

சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதுயுக்தி… தனியார் விடுதி ஊழியர்கள் 4 பேர் கைது…

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இது ஆசியாவின் மிகப் பழமையான புலிகள் காப்பகம். இங்கு உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள்  தங்குவதற்கு முதுமலை வெளிவட்ட வனப்பகுதிகளில்  ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன

தங்கும் விடுதியாளர்கள், சுற்றுலா பயணிகளை தங்கள் விடுதிகளுக்கு வரவழைக்க பல தவறான பல்வேறு யுத்திகளை பயன்படுத்தி வருவதாக குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக அவர்களின் வலைதள பக்கத்தில் வனவிலங்குகள் தங்கள் விடுதியை சுற்றி நடமாடுவதாக பதிவிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக குற்றசாட்டுகள் எழுந்தன. முதுமலை வெளிவட்ட வனப்பகுதிக்கு உட்பட்ட சிங்கார வனச்சரகத்திற்குட்பட்ட ஆச்சகரை பகுதியில் அவடேல் என்ற பெயரில் தனியார் தங்க விடுதி செயல்பட்டு வருகிறது. அந்த தனியார் தங்கு விடுதியில் மேலாளர் உட்பட அனைத்து பணியாளர்களும் சத்தீஸ்கர் மற்றும் மேற்குவங்கம் மாநிலங்களைச் சேர்ந்த வட மாநில தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் இங்கு தங்கும் சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் வனவிலங்குகளை கண்டு களிப்பதற்காக இவர்கள் புது யுக்தியை பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

யானைகள் போன்ற வனவிலங்குகளுக்கு தங்களின் விடுதி அருகில் வரவழைக்க அவைகளுக்கு பிடித்த உணவு மற்றும் தங்கும் விடுதிகளில் மீதம் உள்ள உணவுகளை  இவர்கள் விலங்குகளுக்கு உணவாக கொடுத்து நாள்தோறும் காட்டு யானைகள் மற்றும் புலிகள் போன்ற வனவிலங்குகளை தங்கள் விடுதிக்கு அருகில் வரவழைக்கும் பணிகளில் ஈடுபடுவதாக புகார்கள் வந்துள்ளன.

இது தொடர்பாக புகார்கள் வந்ததை தொடர்ந்து சிங்கார வனச்சரகர் பீட்டர் தலைமையிலான வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று ஆங்காங்கே பிரிந்து யானையை தங்கள் விடுதிக்கு வரவழைப்பதற்கான முயற்சியில் சதீஷ்கர், மேற்குவங்கம், வடமாநிலத்தை சேர்ந்த அனிருத்த அவஸ்தி (26), திரவ் குமார் ராங்(33), அஜ்மாவுல்லா (25), டேவிட் ரியாங்க் (19) என்ற நான்கு பேரும் ஈடுபட்டிருந்தனர். இதை மறைந்திருந்து கண்காணித்து வனத்துறையினர் இவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும் விசாரணையில்  வனப் பகுதிகளில் உள்ள வனவிலங்குகளுக்கு எரிச்சல் ஊட்டும் விதமாக நடப்பது மட்டுமின்றி உணவு முறையில் மாற்றம் செய்தது என தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் துணை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி  கூடலூர், குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தி கூடலூர் கிளைச்சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!