ஆந்திர பிரதேச மாநிலம் பார்வதி மன்யம் மாவட்டம் காட்ரகடா பகுதியில், காட்டு யானைகள் சுற்றித்திரிந்துள்ளன. ஒடிசாவில் இருந்து வந்த 6 யானைகள் அப்பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில், வனத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. யானைகளிடம் இருந்து பயிர்களை காக்க விவசாயிகள் மின்வேளி அமைத்துள்ளனர். இந்நிலையில் விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 4 யானைகள் உயிரிழந்துள்ளன. மின்வேலியில் சிக்கிய மேலும் 2 யானைகள் நூலிழையில் உயிர் தப்பின. யானைகள் உயிரிழந்த சம்பவம் விலங்கின ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.