மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 2 நாட்களாக விடாது மழை பெய்து வருவதால் இன்று மேற்கண்ட மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. மழை நாளை குறையும் என அறிவிக்கப்பட்டாலும், நாளைக்கும் மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும் பொது விடுமுறையை தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா அறிவித்து உள்ளார்.
