வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா, தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாகப்பட்டினத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றகுத்த தாழ்வு நிலை நேற்று இலங்கைியல் கரையை கடந்ததையொட்டி தமிழகத்த்தில் உள்ள துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டினை இறக்கிவிடலாம் என வானிலை மையம் அறிவுறுத்தியதையடுத்து புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டு விட்டது. இன்று பல மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடங்கி விட்டனர்.