தமிழ்க் கடவுளாம் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு, திண்டுக்கல் மாவட்டம் பழனி. இங்குள்ள முருகனை தரிசிக்க தினந்தோறும் ஆயிரகணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இங்கு பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
வருகிற ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25ம் தேதிகளில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. அறநிலையத்துறை இதனை அறிவித்துள்ளது. . மாநாட்டு நிகழ்வுகளை அறிந்து கொள்ள, பங்கேற்போர் பதிவு செய்ய ,ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பிக்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்தியா, வெளிநாடுகளில் இருந்து பங்கேற்போர் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கவிரும்புவோருக்காக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்ததை தொடர்ந்து இந்த மாநாடு நடத்தப்படுகிறது.