நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட்களில் ஆட இந்தியா வந்துள்ளது. ஏற்கனவே நடந்த பெங்களூரு, புனே போட்டிகளில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இறுதி டெஸ்ட் போட்டி இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் டாம் லாதம், கான்வே ஆகியோர் பேட்டிங் செய்தனர். 3.2 ஓவரில் கான்வே, ஆகாஷ் தீப் பந்தில், எல்பிடபிள்யூ ஆகி ஆவுட் ஆனார். அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அப்போது நியூசிலாந்து15 ரன்கள் எடுத்திருந்தது.
மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது.(27 ஓவர்). லாதம்(28), ரச்சின்(5) ஆகியோரும் அவுட் ஆனார்கள். இந்த இரு விக்கெட்டுகளும் வாஷிங்டன் சுந்தருக்கு கிடைத்தது. தற்போது யங்(38), மிட்செல்(11) ஆகியோர் ஆடிக்கொண்டிருந்தனர். 27 ஓவர் முடிந்த நிலையில் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.