ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. ஆரம்பம் முதல் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மிக அதிக ஓட்டுகள் பெற்று வருகிறார். 3வது சுற்று முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இளங்கோவன் 23,902 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 8,275 வாக்குகள் பெற்றிருந்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 1,620, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 290 வாக்குகள் பெற்றிருந்தனர்.
Tags:3வது சுற்று முடிவு