Skip to content

103 வயதில் 3ம் திருமணம் செய்த சுதந்திர போராட்ட வீரர்

  • by Authour

மத்திய பிரதேச மாநிலம், போபாலின் இத்வாரா பகுதியைச் சேர்ந்தவர் ஹபிப் நாசர். 103 வயதான இவர்  சுதந்திர போராட்ட வீரர்., முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி காலமான நிலையில் தனியாக வசித்து வந்தார். தனக்கு ஆறுதலாக, அன்புடன் கவனிப்பதற்கு யாரும் இல்லாததால் மனவருத்தத்தில் இருந்த அவர், 49 வயது நிரம்பிய பரோஸ் ஜகான் என்ற பெண்ணை  கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஓராண்டு கழித்து  இந்த தம்பதியரின் வீடியோ வெளியாகியிருக்கிறது. திருமணம் முடிந்து புது மனைவியை ஆட்டோவில் வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹபிப் நாசருக்கு அங்கிருந்தவர்கள் வாழ்த்து தெரிவிப்பதும், அதை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதும் வீடியோவில் பதிவாகியிருக்கிறது. புதிய மனைவியுடன் வீட்டிற்கு வந்தபோது அப்பகுதியில் உள்ள சிலர் அவரைப் பார்த்து சிரித்தனர் . ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு என்றபடியே சென்று விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!