Skip to content

3 ஆபரேஷன்…..இப்படியும் ஒரு கொடூரம்…. மனைவி மீது கணவன் போலீசில் புகார்

மத்திய பிரதேச மாநிலம்  மொர்ரேனா ஜவுரா தாலுகாவிற்கு உட்பட்ட உம்மத்கர் பன்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகுராஜ் குஷ்வாஹா. இவர் அங்குள்ள மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரெண்டு சைலேந்திர சிங் சவுகானிடம் புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார்.அதில் அவர் கூறி இருப்பதாவது:- சில ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி என்ற ராஜகுமாரியை நான் திருமணம் செய்து கொண்டேன். திருமணமானதில் இருந்து மனைவியின் நடத்தை சரியில்லை. தினமும் வீட்டில் தெரியாதவர்களை அழைத்து வந்து பேசுவார். முதலில் அவருடைய உறவினர்களாக இருக்கலாம் என்று நினைத்தேன். தினமும் வீட்டுக்குள் அந்நியர்கள் வந்து செல்ல ஆரம்பித்ததும் எனக்கு சந்தேகம் வந்தது. தெரியாதவர்கள் இப்படி வீட்டுக்குள் வருவதும் போவதும் சரியல்ல என்று மனைவியிடம் பலமுறை விளக்கியும் அவர் கேட்கவில்லை.

மாறாக, என்னையும் அவரது குடும்பத்தினரையும் பொய் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி துன்புறுத்த ஆரம்பித்தார். எனது 75 வயது தந்தை கல்யாண் சிங் மீது எனது மனைவி ஒரு முறை பொய்யான மானபங்க வழக்கு பதிவு செய்துள்ளார். நான் ஒருநாள் மனைவியை திட்டினேன் அப்போது அவள் கோபமடைந்து என்னுடைய பிறப்புறுப்பை கடித்து விட்டார். உறவினர்கள் என்னை சிகிச்சைக்காக மொரீனா மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து குவாலியருக்கு அனுப்பப்பட்டேன் குவாலியரில், மருத்துவர்கள்எனக்கு மூன்று அறுவை சிகிச்சை செய்தனர். எனது மனைவி ராஜ்குமாரி மீது வழக்குப் பதிவு செய்து எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *