சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒப்பந்ததாரர் சுந்தர பரிபூரணம் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். A1 சைக்கிள் உரிமையாளர் சுந்தர பரிபூரணம் தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றிருந்தார். இலவச சைக்கிள் வழங்கும் ஒப்பந்ததை மொத்தமாக சுந்தர பரிபூரணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.சமீபத்தில் தமிழகத்தின் சென்னை, கரூர் மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு பகுதிகளில் அரசு ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த வரிசையில், தற்போது சென்னையில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.