Skip to content
Home » விழுப்புரத்திற்கு திருச்சி மாநகராட்சி சார்பில் 37,500 உணவு பொட்டலங்கள் …

விழுப்புரத்திற்கு திருச்சி மாநகராட்சி சார்பில் 37,500 உணவு பொட்டலங்கள் …

திருச்சி மாநகராட்சி சார்பில் மழை வெள்ளத்தால் பாதித்த விழுப்புரம் மாவட்டத்திற்கு 37,500 உணவு பொட்டலங்கள் மேயர் மு. அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் சரவணன் ,துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் இருந்து கொடி அசைத்து அனுப்பி வைத்தார்கள்.

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி சார்பில் 37, 500 உணவு பொட்டலங்கள் லெமன் சாதம் , புளி சாதம் , 1750 பிரட் பாக்கெட்டுகள், 1000 குடிநீர் பாட்டில்கள் மற்றும் ஆயிரம் பிஸ்கட் பாக்கெட் கள் ஆகியவையை புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வழங்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

01.12.2024 அன்று நிவாரண பொருட்கள் மற்றும் மாநகராட்சியின் இரண்டு இளநிலை பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நிவாரண பணி மேற்கொள்வதற்காக 150 தூய்மை பணியாளர்கள், 5 சுகாதார ஆய்வாளர்கள், 10 தூய்மைப்பணி மேட்பாளையாளர்கள், மழை நீர் உறிஞ்சுவதற்கான 10 எச்பி மோட்டார்கள் கொண்டு மழை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு மிகச் சிறப்பாக பணியை செய்து கொண்டு வருகிறார்கள், அதேபோல இளநிலை உதவியாளர்கள் கொண்ட குழுவினர் அப்பகுதியில் உள்ள தேங்கியுள்ள தண்ணீர் ரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றி சிறப்பாக பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

நிவாரணப் பொருள் வெளிய அனுப்பும் நிகழ்ச்சியின் போது மாநகராட்சி நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் மற்றும் துணை ஆணையர்,மண்டல உதவி ஆணையர்கள், உதவி செய்ய பொறியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *