சிவகுமார் தனது 100வது திரைப்படத்தை முன்னிட்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி அறக்கட்டளையை தொடங்கினார். இதன் மூலம் பிளஸ் டூ தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கவுரவித்து வருகிறார். இது அவரது மகன்களான சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மற்றும் கார்த்தி ‘உழவன் அறக்கட்டளையைத் தொடங்குவதற்கு இது உத்வேகமாக இருந்தது.
கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் அகரம் அறக்கட்டளை தற்போது ஏழை மாணவர்களுக்கு சிறிய அளவில் உதவி செய்து வருகிறது. இந்நிலையில், சிவகுமார் கல்வி அறக்கட்டளை, அகரம் இணை ந்து வழங்கும் 45வது ஆண்டு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
அகரம் அறக்கட்டளை சார்பாக 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் தலைமுறையாக கல்லூரி செல்லும் “விளிம்பு நிலை”குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி பரிசளித்து ஊக்கப்படுத்தினர்.
விழா மேடையில் பேசிய நடிகர் சிவக்குமார், “கால் அரைக்காசுக்கு நாளரை கத்திரிக்காய், ஒரு காசுக்கு எத்தனை கத்திரிக்காய்’ இந்த கேள்விக்கு சரியாக பதில் சொன்னால் பரிசு தருகிறேன் என்று பேசியதோடு, தனது மேல் படிப்பு செலவு 365 ரூபாய்ல முடிச்சிட்டேன், ஆனா இப்போ கார்த்தி பையனை ஸ்கூல்ல Pre-KG-க்கு சேர்க்க 2.5 லட்சம் கேக்குறாங்க” என மிகவும் ஆதங்கத்துடன் பேசினார்.
அவரை தொடர்ந்து பேசிய கார்த்தி, “கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும் மாணவர்கள் இங்குள்ளவர்களின் ஆங்கிலம் , உடை போன்றவற்றை பார்த்து மிரண்டு விடாதிர்கள் ஒரு நாள் அவர்களை நீங்கள் மிஞ்சுவீர்கள்” என்று கூறினார்.