திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக நகராஜ் இவர் நேற்று சக காவலர்களான துரை, முகமது காமில் ஆகியோருடன் துவாக்குடிஅரைவட்ட சாலையில் ரோந்து சென்ற பொழுது சந்தேகம் படுப்படியாக சாக்கு பையுடன் நின்று கொண்டு இருந்தவர்களை போலீசார் விசாரித்த பொழுதுபோலீசாரை கண்டதும் தப்பி ஓடிள்ளனர் அப்பொழுது அதில் துவாக்குடி வடக்கு மலை பெரியார் திடலை சேர்ந்த பெருமாள் மகன் கருப்பசாமி (25) என்பவனை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
அவனிடமிருந்து 3 கிலோ 600 கிராம் கஞ்சா வை பறிமுதல் செய்தனர். பின்னர் அவனிடம் விசாரித்த பொழுது மேலும் தப்பி ஓடியவர்கள் கஞ்சாவை எடுத்து வந்து பிரித்து நான்கு பேரும் விற்பனை செய்யலாம் என கூறிதாகவும் அதன்படி எடுத்து வந்ததாக கூறியுள்ளான் . அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்ததோடு மேலும் தப்பி ஓடிய 3 பேரை துவாக்குடி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.