நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் புதிய நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் தொடங்கியது. பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அதைத்தொடர்ந்து மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டம் இயற்றப்பட்டால் மக்களவையில் 181 பெண் எம்.பிக்கள் இடம்பெறுவார்கள். தற்போது 81 பெண் எம்பிக்கள் மட்டுமே உள்ளனர்.