மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் சேகர் மகன் சத்தியசீலன். பென்சிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த இடத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கஞ்சாநகரம் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வருவாய்த் துறையினர் விரைந்து வந்து சோதனை நடத்தியதில் அங்கு 310 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை (மொத்தம் 15 ஆயிரத்து 500 கிலோ) வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து குடிமை பொருள் வழங்கல் குற்றப் பிரிவு புலனாய்வு துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். தப்பிஓடி தலைமறைவாகியுள்ள சத்தியசீலனை போலீசார் தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட அரிசி மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் உள்ள நுகர்வோர் வாணிபக் கழக கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.
